தேசியக் குற்ற ஆவணக் காப்பு வாரியத்தின் (NCRB) 2023 ஆம் ஆண்டிற்கான தரவானது, 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 8% அதிகரிப்பையும், கடந்த மூன்று ஆண்டுகளில் 11% அதிகரிப்பையும் காட்டுகிறது.
19 பெருநகரங்களில் மிக அதிகமாக, டெல்லியில் பெண்களுக்கு எதிரான 13,366 குற்றங்களும், குழந்தைகளுக்கு எதிரான 7,731 குற்றங்களும், முதியோர்களுக்கு எதிரான 1,361 குற்றங்களும் பதிவாகியுள்ளன.
டெல்லியில் கடத்தல் வழக்குகள் மொத்தம் 5,681 ஆக பதிவாகியுள்ளது என்ற நிலையில் இது தேசிய அளவில் மிக அதிகமாகும்.
2023 ஆம் ஆண்டில் டெல்லி தேசியத் தலைநகரப் பகுதியில் (NCT) 6,284 குழந்தைகள் காணாமல் போனதாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
இந்த ஆண்டில் 6,972 பேர் மீட்கப்பட்டாலும், கண்டுபிடிக்கப்படாத குழந்தைகளின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 12,324 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நகரம் இணையவெளிக் குற்ற வழக்குகளில் 10வது இடத்திலும், 4,580 வழக்குகளுடன் பொருளாதாரக் குற்றங்களில் நான்காவது இடத்திலும் உள்ளன என்ற நிலையில் இதில் 130 வழக்குகள் வெளிநாட்டினர் தொடர்பான குற்றங்கள் மற்றும் 117 வழக்குகள் மனிதக் கடத்தல் தொடர்பான குற்றங்கள் ஆகும்.
டெல்லியில் 2,278 வழக்குகளில் சிறார்களும், அதைத் தொடர்ந்து சென்னையில் 523 வழக்குகளும், பெங்களூருவில் 427 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
டெல்லியில் 2,278 குற்றங்களில் சிறார்கள் ஈடுபட்டுள்ளனர் என்ற நிலையில் அதைத் தொடர்ந்து சென்னையில் 523 வழக்குகளிலும், பெங்களூருவில் 427 வழக்குகளிலும் சிறார்கள் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டில் அதிக எண்ணிக்கையிலான பாலியல் வன்கொடுமை மற்றும் பொருளாதார குற்ற வழக்குகள் இராஜஸ்தானில் பதிவாகியுள்ளன.
2023 ஆம் ஆண்டில் இராஜஸ்தானில் மொத்தம் 5,194 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன.
இராஜஸ்தானில் 27,765 பொருளாதாரக் குற்ற வழக்குகளும், அதைத் தொடர்ந்து தெலுங்கானா (26,881) மற்றும் உத்தரப் பிரதேசம் (23,428) ஆகியவற்றிலும் பதிவாகி உள்ளன.
பெண்களுக்கு எதிரான மொத்தக் குற்றங்களில் முறையே 66,381 மற்றும் 47,101 வழக்குகளுடன் இராஜஸ்தானுக்கு அதற்கு அடுத்தபடியாக உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகியனவும் இடம் பெற்றுள்ளன.