TNPSC Thervupettagam

பந்தவ்கரில் உள்ள பௌத்த தலங்கள்

October 5 , 2022 1037 days 444 0
  • மத்தியப் பிரதேசத்தில் உள்ள பந்தவ்கர் புலிகள் காப்பகத்தில் பௌத்த குகைகள் மற்றும் ஸ்தூபிகளை இந்தியத் தொல்லிய ஆய்வுத் துறையானது கண்டுபிடித்துள்ளது.
  • 2வது மற்றும் 5வது நூற்றாண்டுகளைச் சேர்ந்த 26 பௌத்த குகைகள் இங்கு கண்டு பிடிக்கப் பட்டன.
  • இவை பௌத்தத்தின் மகாயான பிரிவைச் சேர்ந்தவையாகும்.
  • குகைகள் மற்றும் அவற்றின் சில எஞ்சியப் பாகங்கள் மகாயான பௌத்தத் தளங்களுடன் ஒத்த வடிவிலான 'சைத்யா' (வட்டமான) கதவுகள் மற்றும் கல் படுக்கைகளைக் கொண்டிருந்தன.
  • பிராமி உரையில் எழுதப்பட்டுள்ள 24 கல்வெட்டுகள் அனைத்தும் 2 முதல் 5 ஆம் நூற்றாண்டுகளுக்கு முந்தையக் காலத்தைச் சேர்ந்தவையாகும்.
  • இந்தக் கல்வெட்டுகள் மதுரா மற்றும் கௌசாம்பி, பவதா, வெஜபாரதா மற்றும் சபத நாயரிகா போன்ற தளங்களைப் பற்றி குறிப்பிடுகின்றன.
  • அவர்கள் குறிப்பிடும் அரசர்களில் பீமசேனா, போத்தசிறி மற்றும் பட்டதேவா ஆகியோர் அடங்குவர்.
  • 9 முதல் 11 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலச்சூரி காலத்தைச் சேர்ந்த 26 கோயில்களின் எஞ்சியப் பாகங்களும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • இதே காலகட்டத்தைச் சேர்ந்த உலகின் மிகப் பெரிய வராஹ சிற்பமும் இங்கு கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
  • குஜராத், மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளில் காலச்சூரி வம்சம் பரவிக் காணப்பட்டது.
  • இது ஆரம்பகால எல்லோரா குகை மற்றும் எலிபெண்டா குகை போன்ற நினைவுச் சின்னங்களுடனும் தொடர்புடையதாகும்.
  • இரண்டு சைவ மடங்களும் இங்கு கண்டறியப்பட்டுள்ளன.
  • குப்தர் காலத்தினைச் சேர்ந்த கதவு அடைப்புகள் மற்றும் குகைகளில் உள்ள சிற்ப வேலைப்பாடுகள் போன்ற சில எஞ்சியப் பாகங்களும் இங்கு கண்டு பிடிக்கப் பட்டு உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்