சுற்றுச்சூழல், நிலைத்தன்மை மற்றும் தொழில்நுட்பத்திற்கான சர்வதேச மன்றம் (iFOREST) ஆனது வடமேற்கு இந்தியாவிற்கான 2025 ஆம் ஆண்டிற்கான பயிர்த் தாளடி எரிப்பு நிலை குறித்த அறிக்கையை வெளியிட்டது.
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் (IARI) உள்ள CREAMS (விண்வெளியில் வேளாண் சூழல் அமைப்பு கண்காணிப்பு மற்றும் மாதிரியாக்கத்திற்கான ஆராய்ச்சி கூட்டமைப்பு) நடத்தும் இந்தியாவின் கண்காணிப்பு அமைப்பு, பல வேளாண் நிலம் சார் எரிப்புகளைத் தவிர்க்கிறது.
இந்த அமைப்பு ஆனது முக்கியமாக இரண்டு துருவ-சுற்றுப்பாதை செயற்கைக்கோள் உணர்வுக் கருவிகளை சார்ந்துள்ளது:
மிதமான தெளிவுத்திறன் கொண்ட வரைபடமாக்க நிறமாலை கதிர் வீச்சளவி / ஸ்பெக்ட்ரோ ரேடியோமீட்டர் (MODIS) மற்றும்
புலனாகும் அகச்சிவப்பு வரைபடமாக்க கதிர்வீச்சுமானி தொகுப்பு (VIIRS).
MODIS மற்றும் VIIRS ஆகியவை காலை 10:30 மணி முதல் பிற்பகல் 1:30 மணி வரை மட்டுமே எரிப்பு சார்ந்த பதிவுகளைப் பதிவு செய்கின்றன என்ற நிலையில்இது பெரும்பாலான பிற்பகல் எரிப்புகளைத் தவறவிடுகிறது.
சுழற்சி மேம்படுத்தப்பட்ட புலனாகும் மற்றும் அகச்சிவப்பு வரைபடமாக்க கருவியின் (SEVIRI) 15 நிமிட தரவு, 2024–2025 ஆம் ஆண்டில் பஞ்சாபில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட பெரிய எரிப்புகள் பிற்பகல் 3:00 மணிக்குப் பிறகு நிகழ்ந்ததாகக் காட்டுகிறது.
ஹரியானாவில், பெரும்பாலான பெரிய எரிப்புகள் 2019 முதல் பிற்பகல் 3:00 மணிக்குப் பிறகு நிகழ்ந்து வருகின்றன என்பதோடுஅது பல ஆண்டுகளாக குறைத்து மதிப்பிடப் பட்டு வருவதாக உள்ளது.
சென்டினல்-2 பன்நிறைமாலை கருவி (MSI) எரிப்பு பதிவான பகுதியின் வரைபடமாக்கல் பஞ்சாபின் எரிப்பு பகுதி 31,447 கிமீ² (2022) அளவிலிருந்து சுமார் 20,000 கிமீ² (2025) ஆகக் குறைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
ஹரியானாவின் எரிப்புப் பகுதி 11,633 கிமீ² (2019) என்ற அளவிலிருந்து 8,812 கிமீ² (2025) ஆகக் குறைந்துள்ளது, ஆனால் நிலையான சரிவு இல்லாமல் ஏற்ற இறக்கமாக உள்ளது.
உண்மையான எரிப்புப் பகுதியின் குறைவானது (25–35%) செயலில் உள்ள எரிப்புப் நிகழ்வு எண்ணிக்கையால் (>90%) வழங்கப்பட்ட குறைப்புகளை விட மிகக் குறைவு ஆகும் என்பதோடுஇது முக்கியக் கண்காணிப்பு இடைவெளிகளை நிரூபிக்கிறது.