TNPSC Thervupettagam

பராக் மேகன் vs ஃபட்டா I எறிகணை

June 20 , 2025 14 days 51 0
  • ஈரானின் ஃபட்டா-1 எறிகணை தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் தனது புதிய வான்வழி பாதுகாப்பு அமைப்பான 'பராக் மேகன்' அல்லது 'Lightning Shield-மின்னல் கவசத்தை' முதன்முறையாக செயல்படுத்தியது.
  • இது பராக் MX எறிகணை பாதுகாப்பு அமைப்பின் சிறப்பு வடிவமாகும்.
  • இது ஆளில்லா விமானங்கள், கப்பல் எறிகணைகள் மற்றும் உந்துவிசை எறிகணைகள் போன்ற பல்வேறு வான்வழியான அச்சுறுத்தல்களிலிருந்து கடற்படைக் கப்பல்களைப் பாதுகாப்பதற்காக கட்டமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த அமைப்பு ஆனது, சார் 6 வழித் துணைக் கப்பல்கள் எனப்படும் மேம்படுத்தப் பட்ட இஸ்ரேலியக் கடற்படை கப்பல்களில் பயன்படுத்தப்படுகிறது.
  • ஃபட்டா-1 என்பது ஒரு நடுத்தரத் தூர தாக்குதல் வரம்புடைய அதி மீயொலி உந்துவிசை எறிகணையாகும்.
  • இஸ்ரேலின் இரும்பு கவசம் மற்றும் ஆரோ போன்ற மிகவும் சிறந்தப் பாதுகாப்பு அமைப்புகளையும் தாண்டி தாக்குவதற்காக வேண்டி இது மிகவும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு ள்ளது.
  • இந்த எறிகணையானது, மேக் 13 மற்றும் 15 ஆகிய வரம்பிற்கு இடையில்  சுமார் 15,000 கிமீ/மணி வேகத்தை எட்டும் திறன் கொண்டது.
  • இது தோராயமாக 1,400 கிலோமீட்டர் (சுமார் 870 மைல்கள்) வரையிலான தாக்குதல் வரம்பைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்