இந்திய அரசானது சமீபத்தில் துவரை, பாசிப் பயிறு மற்றும் உளுந்து போன்ற பருப்பு வகைகளின் இறக்குமதியினை எவ்வித கட்டுப்பாடுமின்றி மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த மூன்று பருப்பு வகைகளும் தடை செய்யப்படாத பட்டியலில் சேர்க்கப் பட்டு உள்ளன.
வர்த்தககர்களிடம் குறைந்த அளவிலேயே இருப்பு உள்ளதன் காரணமாக கடந்த சில வாரங்களாக இவற்றின் விற்பனை விலையானது அதிகரித்துள்ளதையடுத்து இந்த முடிவு மேற்கொள்ளப் பட்டுள்ளது.
மேலும் 2021 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதிக்கு முன்பாக இறக்குமதி செய்யப்பட வேண்டிய சரக்குப் பொருட்களுக்குக் கட்டாயம் அனுமதி வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் இந்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியா பெரும்பாலும் இந்த வகை பருப்புகளை மியான்மர் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்றது.