பருவநிலை தொடர்பான தவறான தகவலை எதிர்த்துப் போராடுவதற்கான COP30 பிரகடனம்
November 17 , 2025 10 days 58 0
பிரேசிலின் பெலெமில் நடைபெற்ற COP30 மாநாட்டில் பருவநிலை மாற்றம் குறித்த தகவல் நெறிமை குறித்த பிரகடனத்தில் பன்னிரண்டு நாடுகள் கையெழுத்திட்டன.
இந்த ஒப்பந்தம் துல்லியமான பருவநிலை தகவல்களைப் பாதுகாக்கிறது மற்றும் தவறான தகவல், மறுப்பு மற்றும் அறிவியலாளர்கள் மீதான தாக்குதல்களை எதிர்த்துப் போராடுகிறது.
கையொப்பமிட்ட நாடுகளில் பிரேசில், கனடா, சிலி, டென்மார்க், பின்லாந்து, பிரான்சு, ஜெர்மனி, ஸ்பெயின், சுவீடன், பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் உருகுவே ஆகியவை அடங்கும்.
இந்த முன்னெடுப்பினை யுனெஸ்கோ, ஐ.நா. மற்றும் பிரேசில் அரசு இணைந்து தொடங்கியுள்ளன.