TNPSC Thervupettagam

பலபரிமாண வறுமைக் குறியீடு மீதான ஒத்துழைப்புக் குழு

September 12 , 2020 1810 days 916 0
  • நிதி ஆயோக்கானது சன்யுக்தா சமாதர் என்பவரது தலைமையில் பலபரிமாண வறுமைக் குறியீடு மீதான ஒத்துழைப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளது,.
  • நிதி ஆயோக்கானது சீர்த்திருத்தங்களை ஏற்படுத்துவதற்காக உலகளாவிய MPI-ன் (Multidimensional Poverty Index) கண்காணிப்புச் செயல்முறையை வழங்கும் பொறுப்பைக் கொண்ட ஒரு முதன்மை  நிறுவனமாகும்.
  • உலகளாவிய MPI என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட 29 உலகளாவியப் பிரிவுகளில் நாட்டின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக இந்திய அரசு மேற்கொண்ட முடிவின் ஒரு பகுதியாகும்.
  • உலகளாவிய MPI என்பது 107 வளரும் நாடுகளை உள்ளடக்கிய பலபரிமாண வறுமையின் ஒரு சர்வதேச  நடவடிக்கையாகும்.
  • உலகளாவிய MPI 2020-ன் படி, மொத்தமுள்ள 107 நாடுகளில் இந்தியா 62வது இடத்தில் உள்ளது.
  • இது முதன்முறையாக 2010 ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்டு வறுமை & மனித மேம்பாட்டு முன்னெடுப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றினால் மேம்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்