பாக்டீரியா எதிர்ப்புத் திறன் கொண்ட எலும்புப் பொருத்துதல்/உள்வைப்பு
August 21 , 2026 3 days 54 0
இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (IIT) மண்டியின் ஆராய்ச்சியாளர்கள், முப்பரிமாண (3D) அச்சு முறையில் தயாரிக்கப்பட்ட எலும்புப் பொருத்துதல்களுக்கான (bone implants), உயிரியல் அமைப்பால் ஈர்க்கப்பட்ட ஒரு பூச்சினை உருவாக்கியுள்ளனர்.
இப்பூச்சு கடல் முள்ளெலிகளைப் போன்ற சிறிய ஹைட்ராக்ஸியபடைட் அமைப்புகளைப் பயன்படுத்துகிறது மற்றும் பாக்டீரியாக்களை இயந்திரத்தனமாக சேதப்படுத்தும் திறன் கொண்டது.
இந்த உள்வைப்புகள் பாலில்லாட்டிக் அமிலம் (PLA) என்ற மட்கக்கூடிய நெகிழியைப் பயன்படுத்துகின்றன, ஆனால் இதன் மேற்பரப்பு எலும்புகளுடன் எளிதில் பிணைக்கப்படுவதில்லை.
புதிய பூச்சு எலும்பு ஒருங்கிணைப்பை மேம்படுத்துகிறது மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் அல்லது வேதிப்பொருட்களைச் சார்ந்திருக்காமல் பாக்டீரியா தொற்றைக் குறைக்க உதவுகிறது.
இந்த நுட்பத்தில் உள்வைப்பை காரக் கரைசலால் சிகிச்சை செய்து, பின்னர் 90°C வெப்பநிலையில் நீர்வெப்பச் சிகிச்சை அளிப்பதன் மூலம் ஊசி போன்ற ஹைட்ராக்ஸியபடைட் கொத்துகள் உருவாக்கப்படுகின்றன.