TNPSC Thervupettagam

பாதுகாப்புக் கொள்முதல் நடைமுறை 2020

March 24 , 2020 1866 days 621 0
  • மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் புதிய பாதுகாப்புக் கொள்முதல் நடைமுறையின் வரைவை வெளியிட்டுள்ளார்.
  • இந்தப் புதிய நடைமுறையானது உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பாதுகாப்புக் கொள்முதல் நடைமுறை என்பது பாதுகாப்புச் சாதனங்களின் கொள்முதலை எளிமையாக்குவதற்கான ஒரு செயல்முறையாகும்.
  • இந்தப் புதிய செயல்முறையானது உள்நாட்டு உதிரிப் பொருட்களின் (பாதுகாப்பு) விகிதத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த விகிதமானது இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட பாதுகாப்பு சார்ந்த உதிரிப் பொருட்களின் சதவிகிதத்தைக் குறிக்கின்றது.
  • இந்த நடைமுறையானது “உலகளாவிய வாங்கல்” என்ற ஒரு பிரிவை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இந்தப் பிரிவின் கீழ், தேவையான பாதுகாப்புத் துறை  சார்ந்த பொருட்கள் மட்டுமே அயல் நாடுகளிடமிருந்து பெறப்பட இருக்கின்றது.
  • தற்போது நடைமுறையில் உள்ள “வாங்கல்” மற்றும் “உற்பத்தி செய்தல்” என்ற வகைகளைத் தவிர கொள்முதலுக்காக “குறிப்பிட்ட கால ஒப்பந்தம்” (குத்தகை) என்ற ஒரு புதிய பிரிவும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
  • இது தொடர் வாடகை பணவழங்கீடுகளுடன் மிக அதிக அளவிலான ஆரம்ப கால மூலதன முதலீட்டிற்கு மாற்றாக விளங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்