பாம்புக்கடி குறித்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையின் ஆய்வு அறிக்கை
September 3 , 2022 993 days 436 0
இந்திய மருத்துவ ஆராய்ச்சிச் சபையானது (ICMR) நாட்டின் அனைத்துப் புவியியல் பகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் அமைந்த 14 மாநிலங்களில் பாம்புக்கடியால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த முதல் ஆய்வை நடத்தி வருகிறது.
இமாச்சல பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, ஒடிசா, மேற்கு வங்காளம், உத்தரகாண்ட், மேகாலயா, மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்கள் இந்த ஆய்வில் சேர்க்கப் பட்டுள்ளன.
புவியியல் ரீதியாக, பாம்பு கடித்தால் ஏற்படும் பாதிப்புகளானது, இந்தியாவில் அதிகமாக காணப்படும், வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டலப் பகுதிகளில் அதிகளவில் தாக்கத்தினை விளைவிக்கின்றன.
உலகெங்கிலும் உள்ள மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி அமைப்புகளில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிச் சபையும் ஒன்றாகும்.
உயிரி மருத்துவ ஆராய்ச்சியை உருவாக்குதல், ஒருங்கிணைத்தல் மற்றும் ஊக்குவித்தல் ஆகியவற்றுக்கான உயர்நிலை அதிகாரம் கொண்ட ஒரு அமைப்பு இது ஆகும்.