பாரத் பயோடெக்கின் பிபிவி 154 தடுப்பூசி
February 5 , 2021
1628 days
739
- பாரத் பயோடெக்கின் பிபிவி 154 என்பது நாசி வழியே செலுத்தப்படும் வகையிலான (இன்ட்ரானேசல்) கோவிட் -19 தடுப்பூசியைப் பெறுவதற்கான முதல் முயற்சியாகும்.
- தடுப்பூசிகள் பொதுவாக தசைகள் அல்லது தோல் மற்றும் தசைகளுக்கு இடையில் உள்ள திசுக்களில் ஊசியின் வழியாக செலுத்தப் படுகின்றன.
- ஆனால் இன்ட்ரானேசல் தடுப்பூசிகள் என்பது நாசிக்குள் மருந்து தெளிக்கப் படுவதைக் குறிப்பிடுகிறது.
- இது உட்செலுத்துவதற்குப் பதிலாக உள்ளிழுக்கப் படுகிறது.
- ஆனால் தடுப்பூசி செலுத்துவதற்கான ஒரு பொதுவான முறை இதுவல்ல.
- இதுவரையில், சில காய்ச்சல்களுக்கு மட்டுமே இந்த முறையில் மருந்து செலுத்தப் படுகின்றன.

Post Views:
739