தேசிய இணைய ஆளுகைப் பிரிவானது (NeGD) 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படும் சஹாகர் டாக்ஸி கூட்டுறவு லிமிடெட் நிறுவனத்தின் பாரத் வாடகை வாகன சேவை முன்னெடுப்பிற்கான தொழில்நுட்ப ஆதரவினை வழங்க உள்ளது.
பாரத் வாடகை வாகன சேவை என்பது அதன் முதல் வகையான கூட்டுறவு சார்ந்த, குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் தேசிய பயண சேவையாகும்.
இந்த கூட்டாண்மையில் பாதுகாப்பான, தடையற்ற டிஜிட்டல் அணுகலுக்காக DigiLocker, UMANG மற்றும் API Setu உடன் தள ஒருங்கிணைப்பும் அடங்கும்.
பன்மொழி மற்றும் அணுகக்கூடிய வடிவமைப்புடன் உள்ளடக்கிய, தொழில்நுட்பம் சார்ந்த பொதுச் சேவைகளை வழங்கும் டிஜிட்டல் இந்தியாவின் தொலைநோக்கு கொள்கையுடன் இந்த சேவை ஒன்றியமைகிறது.