TNPSC Thervupettagam

பாலியெஸ்டர் துணியில் தேசியக் கொடிகள்

March 5 , 2022 1249 days 506 0
  • இந்திய அரசானது பாலியெஸ்டர் துணிகளைக் கொண்டு எந்திரங்களால் தயாரிக்கப் படும் தேசியக் கொடிகளை உற்பத்தி செய்யவும் அவற்றை இறக்குமதி செய்யவும் அனுமதி வழங்கியுள்ளது.
  • இதற்காக வேண்டி 2002 ஆம் ஆண்டின் இந்தியக் கொடிக்கான நெறிமுறையானது திருத்தப் பட்டுள்ளது.
  • முந்தைய விதிகளானது, கையினால் நூற்கப்பட்ட மற்றும் நெய்யப்பட்ட கம்பளி, பருத்தி அல்லது பட்டு காதித் துணிகளால் ஆன கொடிகளை மட்டுமே அனுமதித்தது.
  • அதே சமயம் எந்திரங்களால் தயாரிக்கப்படும் கொடிகளின் இறக்குமதிக்கு 2019 ஆம் ஆண்டில் தடை விதிக்கப்பட்டது.
  • தேசியக் கொடிகளானது கையினால் நூற்கப்பட்ட மற்றும் கையால் நெய்யப்பட்ட (அ) எந்திரங்களால் தயாரிக்கப்பட்ட பருத்தி, பாலியெஸ்டர், கம்பளி, பட்டு காகிதத் துணி ஆகியவற்றால் செய்யப் படலாம் என்று சமீபத்திய திருத்தமானது அங்கீகரித்தது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்