பியாஸ் வளங் காப்பகத்தில் மீண்டும் அறிமுகப் படுத்தப்படும் கங்கை நீர் முதலைகள்
December 22 , 2021 1336 days 554 0
பஞ்சாப் மாநில வனவிலங்குச் சரணாலயப் பிரிவானது பஞ்சாபின் ஆறுகளில் அரை நூற்றாண்டிற்கு முன்பாக அழிந்து போன கங்கை நீர் முதலைகளை அங்கு மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.
கங்கை நீர் முதலைகள் (கவியாலிஸ் கேஞ்செட்டிகஸ் அல்லது கவியல்ஸ்) ஆசிய முதலை இனத்தில் மிகவும் அருகிவரும் இனங்களாகும்.
கங்கை நீர் முதலைகளின் எண்ணிக்கை தூய்மையான நதியின் ஒரு குறிகாட்டி ஆகும்.