TNPSC Thervupettagam

பிரதமர் மோடியின் வாரணாசிப் பயணம்

February 22 , 2020 1903 days 626 0
  • பிரதமர் மோடி ஜங்கம்வாடி மடத்திற்குச் சென்று, 19 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட ‘ஸ்ரீ சித்தாந்த சிகாமணி கிரந்த்’ என்ற பதிப்பை வெளியிட்டுள்ளார்.
  • இவர் ‘ஸ்ரீ சித்தாந்த சிகாமணி கிரந்த்’ என்ற கைபேசிச் செயலியையும் தொடங்கி உள்ளார்.
  • இவர் தீன்தயாள் உபாத்யாயா குறித்த நினைவுச் சின்னத்தைத் தேசத்திற்கு அர்ப்பணித்தார். மேலும் இவர் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (Rashtriya Swayam sewak Sangh - RSS) சிந்தனையாளரான தீன்தயாள் உபாத்யாயாவின் 63 அடி உயர சிலையையும் திறந்து வைத்தார்.
  • இவர் பின்வரும் திட்டங்கள் உட்பட 36 வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். அவையாவன:
    • 430 படுக்கைகள் கொண்ட உயர்தரச் சிகிச்சையளிக்கும் சிறப்பு அரசு மருத்துவமனை மற்றும்
    • பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் (Banaras Hindu University - BHU) 74 படுக்கைகள் கொண்ட மனநல மருத்துவமனை.
  • இந்த உயர்தர சிகிச்சையளிக்கும் சிறப்பு அரசு மருத்துவமனையானது ஏழு அண்டை மாநிலங்கள் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த சுமார் 200 மில்லியன் மக்களுக்கு சேவை செய்ய இருக்கின்றது.
  • காசி மகாகல் விரைவு ரயில் எனப் பெயரிடப்பட்ட இந்தியாவின் மூன்றாவது தனியார் ரயிலையும் இவர் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
  • இந்த ரயிலானது வாரணாசி, உஜ்ஜைன் மற்றும் ஓம்காரேஷ்வர் ஆகியவற்றின் மூன்று "ஜோதிர்லிங்க யாத்ரீக மையங்களை" இணைக்க இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்