TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி உர்ஜா கங்கைத் திட்டம்

February 13 , 2021 1617 days 710 0
  • பிரதமர் அவர்கள் நீர்மப் பெட்ரோலிய வாயு (LPG) இறக்குமதி முனையத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
  • இது 348 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தோப்கி-துர்காபூர் இயற்கை வாயு குழாய்த் தொடர் பிரிவாகும்.
  • இது பிரதான் மந்திரி உர்ஜா கங்கைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  • மொத்தமாக 2540 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்தக் குழாய்த் தொடரானது உத்தரப் பிரதேசம் முதல் ஒடிசா வரை கட்டமைக்கப்பட்டு வருகின்றது.
  • தற்பொழுது இந்தத் திட்டத்தில் மேற்கு வங்க மாநிலமும் சேர்க்கப்பட்டுள்ளது.
  • இது அடுத்த 2 ஆண்டில் வாரணாசியில் உள்ள குடும்பங்களுக்கும் அதற்கு அடுத்த ஆண்டில் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் (மாநிலங்களில்) வாழும்  லட்சக் கணக்கான குடும்பங்களுக்கும் குழாய் வழியிலான சமையல் எரிவாயுவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தொலைவு வாரியான பகிர்வு

  • உத்தரப் பிரதேசமானது 338 கிலோ மீட்டர் நீளம் கொண்ட எரிவாயுக் குழாய்த் தொடரைப் பெறுகின்றது.
  • பீகார் மாநிலமானது 441 கிலோ மீட்டர் நீளம் கொண்ட எரிவாயுக் குழாய்த் தொடரைப் பெறுகின்றது.
  • ஜார்க்கண்ட் ஆனது 500 கிலோ மீட்டர் நீளம் கொண்ட எரிவாயுக் குழாய்த் தொடரைப் பெறுகின்றது.
  • மேற்கு வங்க மாநிலமானது 542 கிலோ மீட்டர் நீளம் கொண்ட எரிவாயுக் குழாய்த் தொடரைப் பெற உள்ளது.
  • ஒடிசா மாநிலமானது 718 கிலோ மீட்டர் நீளம் கொண்ட குழாய்த் தொடரின் மூலம் பயன் பெறுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்