இந்திய விமானப் படை தனது Su-30 MKI என்ற முன்னணி போர் விமானத்திலிருந்து பிரம்மோஸ் வான்வழி ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
இது ஏறத்தாழ 300 கிலோ மீட்டர் வரம்பு கொண்ட மீயொலி வேகத்துடன் வானிலிருந்து நிலப் பரப்பில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் ஏவுகணையாகும். 2.5 டன்கள் எடை கொண்ட இந்த ஏவுகணையானது பிரம்மோஸ் விண்வெளி நிறுவனத்தினால் (BAPL - BrahMos Aerospace Limited) மேம்படுத்தப்பட்டதாகும்.
இந்த வகை ஏவுகணையின் இரண்டாவது நிகழ்நேர சோதனை இதுவாகும்.
இந்த வகையைச் சேர்ந்த ஒரு தாக்குதல் நடத்தும் ஏவுகணையை 2.8 மாக் என்ற காற்றின் ஒளிவேகத்தில் செலுத்தி வெற்றிகரமாக சோதனை செய்த உலகின் முதலாவது விமானப் படையாக இந்திய விமானப் படை உருவெடுத்துள்ளது. இது 2017 ஆம் ஆண்டு நவம்பர் 22 அன்று கடற்பரப்பில் உள்ள இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்தது.
BAPL
BAPL ஆனது பின்வருவனவற்றிற்கிடையேயான ஒரு கூட்டு நிறுவனமாகும்.
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு
ரஷ்யாவின் “பெடரல் ஸ்டேட் ஒற்றை நிறுவனமான என்பிஓ மாசினோஸ்ட்ரோயேனியா”.