புதிய உற்பத்தியாளர் விலைக் குறியீட்டுக் கட்டமைப்பு
June 20 , 2026 96 days 225 0
இந்திய அரசு உற்பத்தியாளர் விலைக் குறியீட்டுத் (PPI) தரவு மற்றும் திருத்தப்பட்ட மொத்த விலைக் குறியீட்டுத் (WPI) தொடரை வெளியிட்டுள்ளது.
உற்பத்தியாளர் விலைக் குறியீடு (PPI) என்பது பொருட்கள் மற்றும் சேவைகள் இறுதி நுகர்வோரை சென்றடைவதற்கு முன்பு, உற்பத்தியாளர்கள் பெறும் விலைகளில் ஏற்படும் மாற்றங்களை அளவிடுகிறது.
இந்தியாவின் புதிய கட்டமைப்பு வெளியீடு PPI, சோதனை உள்ளீடு PPI மற்றும் சேவை PPI ஆகியவற்றை உள்ளடக்கியது.
திருத்தப்பட்ட மொத்த விலை குறியீடு (WPI) ஆனது, 2011-12 ஆம் ஆண்டின் அடிப்படை ஆண்டிற்குப் பதிலாக 2022-23 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகப் பயன்படுத்துகிறது; மேலும் இதன் உருப்படிகளின் கூடை எண்ணிக்கை சுமார் 697-லிருந்து 957 உருப்படிகளாக உயர்த்தப் பட்டுள்ளது.
சேவை உற்பத்தியாளர் விலைக் குறியீடு ஆனது ஆரம்பத்தில் வங்கி, காப்பீடு, இரயில்வே, விமானப் பயணிகள் போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் உள்ளிட்ட ஏழு துறைகளை உள்ளடக்கியுள்ளது.
மொத்த விலைக் குறியீடும் (WPI) உற்பத்தியாளர் விலைக் குறியீடும் (PPI) ஐந்து ஆண்டுகளுக்கு ஒன்றாக வெளியிடப்படும், அதன்பிறகு மொத்த விலைக் குறியீடு (WPI) படிப்படியாக நிறுத்தப்படும்.