புதிய புறக்கோள் - பீட்டா பிக்டோரிஸ் டி (Beta Pictoris d)
July 23 , 2026 3 days 63 0
நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை (JWST) பயன்படுத்தும் வானியலாளர்கள், பீட்டா பிக்டோரிஸ் அமைப்பில் 'பீட்டா பிக்டோரிஸ் டி' என்ற புதிய மாபெரும் புறக்கோளைக் கண்டுபிடித்துள்ளனர்.
பீட்டா பிக்டோரிஸ் என்பது 63 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள 23 மில்லியன் ஆண்டுகள் பழமையான நட்சத்திர அமைப்பாகும் என்பதோடு இது அதன் பிரகாசமான சிதைவுப் பொருட்கள்/குப்பைகள் வட்டுக்கு (debris disc) பெயர் பெற்றது; இது தற்போது மூன்று நேரடியாகப் படமாக்கப் பட்ட கோள்களைக் கொண்ட இரண்டாவது கிரக அமைப்பாகும்.
வளிமண்டல கார்பன் மோனாக்சைடு மூலம் JWST-இன் அருகாமையில் உள்ள அகச் சிவப்பு நிறமாலைமானி (NIRSpec) மூலம் பீட்டா பிக்டோரிஸ் டி கண்டறியப்பட்டது, பின்னர் இது நடுத்தர அகச்சிவப்பு கருவி (MIRI) மூலம் நீராவி மற்றும் மீத்தேன் அவதானிப்புகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
இக்கோள் வியாழனை விட சுமார் 2 மடங்கு நிறை கொண்டது மற்றும் சிதைவுப் பொருட்கள்/குப்பைகள் வட்டின் உட்புற விளிம்பிற்கு அருகில் அதன் நட்சத்திரத்திலிருந்து சுமார் 30 வானியல் அலகுகள் (AU) தொலைவில் சுற்றி வருகிறது.
மிதமான தெளிவுத்திறன் கொண்ட நிறமாலை மூலம் முதன்மையாகக் கண்டறியப் பட்ட முதல் புறக்கோள் இதுவாகும் என்பதோடு இது வளிமண்டல கைரேகைகளைப் பயன்படுத்திக் கோள்களைக் கண்டறியும் புதிய முறையை நிரூபிக்கிறது.