புத்தாக்க நிறுவனங்களுக்கான சில்லுகள் தயாரிக்கும் திட்டம் (C2S)
January 21 , 2022 1280 days 528 0
100 புத்தாக்க நிறுவனங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புகள் மற்றும் கல்வித்துறை நிறுவனங்கள் போன்றவற்றிடமிருந்து "புத்தாக்க நிறுவனங்களுக்கான சில்லுகள் தயாரிக்கும் ஒரு திட்டத்தின்" கீழ், மத்திய அரசு விண்ணப்பங்களை கோரியுள்ளது
இது மிகப் பெரிய அளவிலான ஒருங்கிணைப்பு மற்றும் பதிப்பு முறை வடிவமைப்புத் துறைகளில் 85,000 பொறியாளர்களுக்குப் பயிற்சி அளித்திட எண்ணுகின்றது.
இந்தத் திட்டமானது ஐந்து ஆண்டுகளுக்கான 175 ASICகள் (பயன்பாடு சார்ந்த ஒருங்கிணைந்தச் சுற்றுகள்), IP மையக் களஞ்சியம் மற்றும் சில்லுகள் சார்ந்த 20 அமைப்புகளின் IP களஞ்சியம் மற்றும் செயல்நிலை முன்மாதிரிகள் ஆகியவற்றின் உருவாக்கத்திற்கு வழி வகுக்கும்.
இது இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மட்டங்களில் SoC /அமைப்பு (கணினி) நிலை வடிவமைப்புக்கலாச்சாரத்தினை உட்புகுத்துவதன் மூலம் மின்னணு அமைப்பு வடிவமைப்பு மற்றும் உற்பத்தி (ESDM) துறையில் முன்னோக்கிய வளர்ச்சிக்கான ஒரு படியாக அமையும்.