மத்தியப் பழங்குடியினர் நலத்துறை அமைச்சரான அர்ஜீன் முண்டா, உத்தரகாண்டில் உள்ள முசோரியில் அமைந்துள்ள லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாகப் பயிற்சி மையத்தில், பழங்குடியின இந்தியா (Tribes India) புவிசார் குறியீடு மகோத்சவ் என்ற நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
இந்த மகோத்சவத்தில் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து புவிசார் குறியீடு பெற்ற உற்பத்திப் பொருட்கள் காட்சிக்குக் கொண்டு வரப்பட்டு அதன் மூலம் இதன் முக்கிய நோக்கம் இந்தியக் குடிமைப் பணிக்கு தேர்வானவர்களிடையே இத்தகைய உற்பத்திப் பொருட்கள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும் இந்தியாவின் வளமான கலாச்சார மரபுகளைப் பற்றி உணர்வுகளை ஏற்படுத்துவதும் ஆகும்.
“உள்ளூர் உற்பத்திக்குக் குரல் கொடுத்தல்” எனும் குறிக்கோளுடன் “ஆத்ம நிர்பர் பாரத்தை” கட்டமைப்பதையும் இது குறிக்கோளாகக் கொண்டுள்ளது.