பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவதற்கான மசோதா – பாராளுமன்ற நிலைக் குழு
December 28 , 2021 1309 days 629 0
பெண்களின் திருமண வயதை 18 வயதிலிருந்து 21 ஆக உயர்த்துவதற்கான 2021 ஆம் ஆண்டு குழந்தைத் திருமணத் தடுப்பு (திருத்தம்) மசோதாவானது 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 21 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இந்த மசோதாவை மேலும் ஆய்வு செய்வதற்காக இதனை நிலைக் குழுவுக்கு அனுப்ப கீழவை வாக்களித்தது.
கடைசி நேரத்தில் இந்த மசோதாவைப் பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் அறிமுகம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதை நிலைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் வலியுறுத்தின.