பெண்களுக்கு எதிரான இணையவெளி குற்றங்களின் எண்ணிக்கையானது 2021 ஆம் ஆண்டில் 18.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பெண்களுக்கு எதிரான இணையவெளி குற்றங்களில் 61 சதவீத பங்கைக் கொண்டு உள்ள முதல் ஐந்து மாநிலங்களில் 2021 ஆம் ஆண்டில் 2,243 வழக்குகளுடன் கர்நாடகா முதலிடத்திலும், 1,687 வழக்குகளுடன் மகாராஷ்டிரா இரண்டாம் இடத்திலும், 958 வழக்குகளுடன் உத்தரப் பிரதேசம் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
பெண்களுக்கு எதிரான இணையவெளி குற்றங்கள் உட்பட அனைத்து இணையவெளி குற்றங்களிலும் தெலுங்கானா மாநிலம் தான் அதிக பங்கைக் கொண்டுள்ளது.
தெலுங்கானாவுக்கு அடுத்த படியாக உத்தரப் பிரதேசம் (8,829), கர்நாடகம் (8,136), மகாராஷ்டிரம் (5,562), மற்றும் அஸ்ஸாம் (4,846) ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இது தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட ஒரு அறிக்கையாகும்.
பெண்களுக்கு எதிரான இணையவெளி குற்றங்களில் இணைய வெளி சார்ந்த அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல், இணைய வெளி ஆபாசப் படங்கள், ஆபாசமான விஷயங்களை உள் இடுகையிடுதல், பின்தொடர்தல், அவதூறு செய்தல், உருமாற்றம் செய்தல் போன்றவை அடங்கும்.