கடந்த ஆண்டில் தேசியப் பெண்கள் ஆணையத்தில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் கிட்டத்தட்ட 31,000 என்ற அளவில் பதிவாகி உள்ளன.
2014 ஆம் ஆண்டு முதல் பதிவான வழக்குகளில் இதுவே அதிகமாகும்.
அவற்றுள் பாதியளவு வழக்குகள் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் பதிவாகியுள்ளன.
2020 ஆம் ஆண்டில் பதிவான வழக்குகளுடன் ஒப்பிடுகையில் 2021 ஆம் ஆண்டில் 30% என்ற அளவில் அதிக வழக்குகள் பதிவாகியுள்ளன.
உத்தரப் பிரதேசத்தில் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை, குடும்ப வன்முறை போன்றவை தொடர்பான வழக்குகளே அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளதாக தரவுகள் கூறுகின்றன.