பெல்ஜிய நாட்டு அரசானது 2025 ஆம் ஆண்டிற்குள் தனது நாட்டில் உள்ள அனைத்து அணு மின் நிலையங்களையும் மூடுவதற்கு கொள்கை ரீதியாக ஒப்புக் கொண்டு உள்ளது.
இருப்பினும், எரிசக்தி விநியோகத்தை உறுதிப்படுத்த முடியாவிட்டால், இரண்டு அணு உலைகளின் செயல்படும் காலத்தினை நீட்டிப்பதற்கான ஒரு வாய்ப்பினை வழங்கச் செய்யவும் வேண்டி அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
நிலையான எரிசக்தி ஆதாரங்களுக்கான பாலமாக எரிவாயு உபயோகத்தைப் பயன்படுத்துகின்ற அதே சமயத்தில் அணுமின் நிலையங்களின் செயல்பாட்டினைப் படிப்படியாக நிறுத்தவும் அந்த நாடு முடிவு செய்துள்ளது.