TNPSC Thervupettagam

பேடி பச்சாவோ பேடி பதாவோ திட்டம் நீட்டிப்பு

July 19 , 2022 1065 days 583 0
  • பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆனது, பேடி பச்சாவோ பேடி பதாவோ (BBBP) திட்டத்தை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளது.
  • ஒவ்வோர் ஆண்டும் பிறப்புப் பாலின விகிதத்தில் 2 புள்ளிகள் முன்னேற்றத்தை அடைவதை அமைச்சகம் இலக்காக நிர்ணயித்துள்ளது.
  • இது மருத்துவமனையில் நடைபெறும் மகப்பேறு சதவீதத்தில் 95% அல்லது அதற்கு மேல் முன்னேற்றம் அடையா எண்ணுகின்றது.
  • இது ‘கேலோ இந்தியா’ திட்டத்தின் கீழ் பெண்களின் திறமைகளைக் கண்டறிந்து அவர்களை உரிய அதிகாரிகளுடன் தொடர்பு மேற்கொள்ள வைப்பதன் மூலம் விளையாட்டுத் துறைகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க எண்ணுகின்றது.
  • இது குடும்ப வன்முறை மற்றும் ஆட்கடத்தல் உள்ளிட்ட வன்முறைகளை எதிர் கொள்ளும் பெண்களுக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தீர்வு மையங்களை வலுப்படுத்த எண்ணுகின்றது.
  • பேடி பச்சாவோ பேடி பதாவோ திட்டம் ஆனது 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கப் பட்டது.
  • 2011 ஆம் ஆண்டில் ஒவ்வொரு 1,000 ஆண் குழந்தைகளுக்கு 918 பெண் குழந்தைகளாக இருந்த குழந்தைப் பாலின விகிதமானது குறைந்து வருதல் மற்றும் பாலின விருப்பம் அடிப்படையிலான கருக்கலைப்பு ஆகிய பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்திட்டமானது இந்தியாவின் 405 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்