TNPSC Thervupettagam

பைரவ் ஆளில்லா விமானங்கள் பிரிவு

January 11 , 2026 14 hrs 0 min 60 0
  • இந்திய இராணுவமானது, பைரவ் என்ற புதிய நவீனப் போர் படையை உருவாக்கி ள்ளது.
  • கண்காணிப்பு, உளவு பார்த்தல் மற்றும் துல்லியமான தாக்குதல்களுக்காக இந்தப் படையில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டப் பயிற்சி பெற்ற ஆளில்லா விமான செயல்பாட்டாளர்கள் உள்ளனர்.
  • இதில் எல்லைகளில் 25 படைப்பிரிவுகளாக விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், 15 படைப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • பைரவ் உத்தி சார் மற்றும் செயல்பாட்டுப் பணிகளுக்காக துணை சிறப்புப் படைகள் (SF) மற்றும் வழக்கமான காலாட்படைக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்கிறது.
  • தெற்கு படைப்பிரிவின் கீழ் ஒரு படைப்பிரிவு ஆனது பாலைவனப் பகுதியில், முக்கியமாக இராஜஸ்தானைச் சேர்ந்த படைப்பிரிவுகளுடன் நிலை நிறுத்தப் பட்டு உள்ளது.
  • இராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதியன்று நடைபெறும் இந்திய இராணுவ தின அணிவகுப்பில் இந்த படைப் பிரிவுகள் பொது மக்கள் முன் அணிவகுப்பு மேற்கொள்ளும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்