போர்ப்ஸ் இதழின் உலகின் அதிகாரம் வாய்ந்த 100 பெண்களின் பட்டியல் – 2021
December 11 , 2021 1337 days 695 0
2021 ஆம் ஆண்டிற்கான போர்ப்ஸ் இதழின் உலகின் அதிகாரம் வாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் இந்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் 37வது இடத்தினைப் பெற்றுள்ளார்.
இது இத்தகைய ரீதியிலான 18வது பட்டியலாகும்.
இவர் தொடர்ந்து 3வது ஆண்டாக இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
இவர் 2020 ஆம் ஆண்டில் 41வது இடத்தினையும் 2019 ஆம் ஆண்டில் 34வது இடத்தினையும் பெற்றிருந்தார்.
இந்தியாவின் 7வது பெண் கோடீஸ்வரரான ஃபால்குனி நாயர், இப்பட்டியலில் 88வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இப்பட்டியலில் 4 இந்தியப் பெண்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.
மெக்கென்சீ ஸ்காட் இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
கமலா ஹாரீஸ் இப்பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.