TNPSC Thervupettagam

ப்ரூ பழங்குடியினர் - அகதிகள் பிரச்சினை

December 4 , 2020 1698 days 759 0
  • ப்ரூ அல்லது ரியாங் பழங்குடியினர் திரிபுரா, அசாம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
  • திரிபுராவில் இந்தச் சமூகமானது குறிப்பாக எளிதில் பாதிக்கப்படக் கூடிய ஒரு பழங்குடியினக் குழுவாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
  • மிசோரமில், இவர்களது பெயரை அம்மாநிலத்தின் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கக் கோரி பூர்வாங்க அமைப்புகளால் அவர்கள் இலக்காக்கப் பட்டுள்ளனர்.
  • திரிபுராவில் இவர்களது நிரந்தரக் குடியிருப்பை உறுதி செய்வதன் ஒரு முயற்சியாக, இந்த ஆண்டில் மத்திய மற்றும் இரண்டு மாநிலங்களுக்கிடையே (மிசோரம் மற்றும் திரிபுரா) ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.
  • இந்த ஒப்பந்தத்தின்படி, அகதிகள் முகாம்களில் வாழும் 32000 மக்கள் திரிபுரா மாநிலத்தில் நிரந்தரக் குடியிருப்பாளர்களாக அறிவிக்கப் பட்டுள்ளனர்.
  • இந்த ஒப்பந்தமானது திரிபுரா மாநிலத்தில் உள்ள வங்காளிகள் மற்றும் மிசோ ஆகிய பழங்குடியின குழுக்களின் போராட்டங்களுக்கு இட்டுச் சென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்