TNPSC Thervupettagam

மண் வளத்திற்கான உத்திசார் திட்ட வரைபடம்

February 16 , 2026 17 hrs 0 min 44 0
  • நமது மாநிலத்தில் மண் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் நிலையான விவசாயத்தை ஆதரிக்கவும் ஒரு உத்திசார் திட்ட வரைவைத் தமிழ்நாடு செயல்படுத்தி வருகிறது.
  • தமிழக அரசின் மண் வளத்தை வலுப்படுத்தும் திட்டத்திற்கு சுமார் 206 கோடி பட்ஜெட் ஒதுக்கப் பட்டுள்ளது.
  • இந்தத் திட்ட வரைவு, விவசாய நிலங்களில் மண் ஊட்டச்சத்து மற்றும் வளத்தை மேம்படுத்த பசுந்தாள் உர சாகுபடியை ஊக்குவிக்கிறது.
  • சுமார் 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களில் பசுந்தாள் உர விதைகளைப் பரப்ப திட்டமிடப்பட்டுள்ளது என்பதோடு இதனால் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைவார்கள்.
  • மண்-வள மேம்பாட்டு நடவடிக்கைகளை ஆதரிக்க 20 கோடி தொடக்க நிதி ஒதுக்கப் பட்டது.
  • மண் ஊட்டச்சத்துக்கள் மற்றும் உரப் பயன்பாடு குறித்த தகவல்களை வழங்கச் செய்வதற்காக தமிழ்நாடு ஏற்கனவே 15.25 மில்லியனுக்கும் அதிகமான மண் சுகாதார அட்டைகளை (SHC) விவசாயிகளுக்கு விநியோகித்துள்ளது.
  • இந்தத் திட்ட வரைவு மாநிலத்தில் நிலையான விவசாயம், காலநிலை மீள்தன்மை மற்றும் நீண்ட கால உணவுப் பாதுகாப்பை ஆதரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்