TNPSC Thervupettagam

மத்திய கலால் மசோதா, 2025

December 7 , 2025 17 days 106 0
  • 1944 ஆம் ஆண்டு மத்திய கலால் சட்டத்தினை திருத்துவதற்காக, பாராளுமன்றம் 2025 ஆம் ஆண்டு மத்திய கலால் (திருத்த) மசோதாவினை நிறைவேற்றியுள்ளது.
  • இந்த மசோதா சிகரெட், சுருட்டு, ஹூக்கா புகையிலை, மெல்லும் வகையிலான புகையிலை, சர்தா மற்றும் வாசனைப் புகையிலை ஆகியவற்றின் மீதான கலால் வரி மற்றும் வீத வரியை உயர்த்துகிறது.
  • சிகரெட்டுகளுக்கு, 1,000 குச்சிகளுக்கு 200 முதல் 735 ரூபாய் வரை இருந்த கலால் வரி 2,700 முதல் 11,000 ரூபாய் வரையில் அதிகரிக்கிறது.
  • மெல்லும் புகையிலைக்கான வரி 25 சதவீதத்திலிருந்து 100% ஆகவும், ஹூக்கா வரி 25 சதவீதத்திலிருந்து 40% ஆகவும் அதிகரிக்கிறது.
  • புகைபிடித்தலுக்குப் பயன்படுத்தப்படும் குழாய்கள் மற்றும் சிகரெட்டுகளுக்கான புகையிலைக் கூறுகளின் கலவைகளுக்கான வரியானது 60 சதவீதத்திலிருந்து 325% ஆக அதிகரிக்கப் படுகிறது.
  • மாநிலங்களவை இந்த மசோதாவை அங்கீகரித்து, இறுதி நிறைவேற்றத்திற்காக மக்களவைக்குத் திருப்பி அனுப்பியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்