TNPSC Thervupettagam

மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் குறித்த தரவு

February 15 , 2021 1617 days 593 0
  • நாடு முழுவதும் மொத்தம் 66,692 மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் (Manual Scavengers) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
  • அதிக எண்ணிக்கையில் மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் உத்தரப் பிரதேசத்தில் (37,379) அடையாளம் காணப்பட்டுள்ளர்.
  • இதற்கு அடுத்து மகாராஷ்டிராவில் 7378 தொழிலாளர்களும் உத்தரகாண்ட்டில் 6170 தொழிலாளர்களும் அடையாளம் காணப் பட்டுள்ளனர்.
  • கடந்த 5 ஆண்டுகளில் சாக்கடைகள் மற்றும் கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் போது ஏறத்தாழ 340 தொழிலாளர்கள் இறந்துள்ளனர்.
  • மொத்த இறப்புகளில் 75% இறப்புகள் உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, தில்லி, மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பதிவாகிள்ளன.
  • உத்தரப் பிரதேசம் (52), தமிழ்நாடு (43) மற்றும் தில்லி (36) ஆகியவை இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளன.
  • மகாராஷ்டிராவில் 34 இறப்புகளும் ஹரியானா மற்றும் குஜராத்தில் தலா 31 இறப்புகளும் பதிவாகியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்