மத்தியக் கல்வித் துறை அமைச்சகமானது "பிரதம மந்திரி இ-வித்யா திட்டத்தில் தகவல் தொடர்புதொழில் நுட்பத்தின் பயன்பாட்டிற்காக" கிங் ஹமத் பின் இசா அல்-கலிஃபா பரிசு என்று அழைக்கப்படும் யுனெஸ்கோவின் அங்கீகாரத்தை வென்றது.
இந்தத் திட்டமானது எண்ணிம முறையிலான, வானொலி வாயிலான, இணையவழிக் கல்வி தொடர்பான அனைத்து முயற்சிகளையும் ஒருங்கிணைக்கிறது.
கற்றல் இழப்புகளைக் குறைப்பதற்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கல்வியை வழங்குவதற்கு என்று பன்முறை அணுகலைச் செயல்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
மத்தியக் கல்வித் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு (CIET) 2021 ஆம் ஆண்டிற்கான கிங் ஹமத் பின் இசா அல்-கலிஃபா பரிசானது வழங்கப்பட்டுள்ளது.