தரமற்ற மருந்துகள் (NSQ) மற்றும் போதை மருந்துகள் மற்றும் மனநலப் பொருட்களின் (NDPS) மருந்து விற்பனையைக் கண்காணிக்க இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த டிஜிட்டல் இணையதளத்தை கர்நாடகா அறிமுகப்படுத்தியுள்ளது.
நிகழ்நேர மருந்துத் தரக் கண்காணிப்பிற்காக மாநில உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்தால் (FDA) இந்த அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒரு மருந்துத் தொகுதி தரமற்றது (NSQ) என அறிவிக்கப்பட்டவுடன், விநியோகச் சங்கிலி முழுவதும் அதன் விற்பனையை இந்த இணையதளம் தானாகவே தடுத்து நிறுத்தும்.
NDPS மருந்துகளை விற்கும் சில்லறை விற்பனையாளர்கள், மருந்துகளை வழங்குவதற்கு முன் நோயாளி, மருத்துவர் மற்றும் மருந்துச் சீட்டு விவரங்களைப் பதிவேற்ற வேண்டும்.
வெளிப்படைத்தன்மை மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக மருந்துகளின் இருப்பு, மருந்துகளைத் திரும்பப் பெறுதல் மற்றும் சந்தேகத்திற்குரிய மருந்துச்சீட்டு முறைகள் ஆகியவற்றை இந்த இணையதளம் கண்காணிக்கிறது.