இந்திய அரசானது, “மாந்தன் இயங்குதளத்தை” தொடங்கியுள்ளது.
இந்தியாவில் தொழில்நுட்பம் சார்ந்த சமூகத் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடிய புத்தாக்கங்கள் மற்றும் தீர்வுகளைச் செயல்படுத்துவதில் தொழில்துறை மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வழி நடத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது NSEIT என்ற அமைப்பினால் இயக்கப்பட்டு, தலைமை அறிவியல் ஆலோசகர் அலுவலகத்தினால் வழி நடத்தப் படுகிறது.