இந்திய இராணுவம் தனது விண்வெளிக் களத் திறனை மேம்படுத்துவதற்காக வேண்டி சமீபத்தில் "ஸ்கைலைட்” என்ற மாபெரும் ஒரு பயிற்சியினை நடத்தியது.
இது இவ்வகையிலான முதலாவது பெரிய அளவிலானப் பயிற்சியாகும்.
இது செயற்கைக்கோள் தொடர்புச் சாதனங்களின் செயல்பாட்டுத் தயார்நிலையைச் சோதிப்பது மற்றும் இந்தச் சாதனங்களை இயக்கும் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டதாகும்.
இது லட்சத்தீவு மற்றும் அந்தமான் தீவுகள் ஆகியவை உட்பட இந்தியா முழுவதும் நடத்தப் படும் பயிற்சியாகும்.
இந்திய இராணுவம் ஆனது ஜிசாட்-7பி என்ற தனது சொந்தத் தகவல் தொடர்பு செயற்கைக் கோளைச் செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோள் ஆனது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஒரு பல்கற்றைச் செயற்கைக் கோள் ஆகும்.
இது மேம்பட்டப் பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.