TNPSC Thervupettagam

மால்வி ஒட்டகங்களின் எண்ணிக்கை சரிவு

July 30 , 2026 3 days 72 0
  • 2019 ஆம் ஆண்டு கால்நடை கணக்கெடுப்பின்படி, மால்வி ஒட்டகங்களின் (வெள்ளை ஒட்டகம்) எண்ணிக்கை 102 ஆகக் குறைந்ததையடுத்து, இது அருகி வரும் இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • மால்வி ஒட்டகம் இந்தியாவின் மிகச்சிறிய ஒட்டக இனமாகும், மேலும் இது நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்பது ஒட்டக இனங்களில் ஒன்றாகும்.
  • இது முக்கியமாக மத்தியப் பிரதேசத்தின் மால்வா பகுதியிலும் ராஜஸ்தானின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது. மேலும் இதன் பால் உற்பத்தி மற்றும் சுமை தூக்கும் திறனுக்காக இது மதிப்பிடப்படுகிறது.
  • ஒட்டகங்களுக்கான தேசிய ஆராய்ச்சி மையம் (NRCC), அதன் தூய்மையான மரபணு அடையாளத்தை பராமரிப்பதன் மூலம் இந்த இனத்தைப் பாதுகாப்பதற்கான அறிவியல் ரீதியான இனப்பெருக்கத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • ஹரியானாவின் கர்னாலில் உள்ள தேசிய விலங்கு மரபணு வளப் பணியகத்தின் (NBAGR) கீழ், கால்நடை உரிமையாளர்களின் பங்கேற்புடன் இந்த பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  • மால்வி, மேவாரி மற்றும் மேவாட்டி ஆகிய ஒட்டக இனங்களில் 300-க்கும் குறைவான இனப்பெருக்கம் செய்யும் பெண் ஒட்டகங்கள் மட்டுமே உள்ளதால் அவை அருகி வரும் இனங்களாகக் கருதப்படுகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்