மாவட்டங்களுக்கான செயல்திறன் தரக் குறியீடு (PGI-D) 2025–26
July 15 , 2026 12 days 106 0
மாவட்டங்கள் முழுவதும் பள்ளிக் கல்வியின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக என மாவட்டங்களுக்கான செயல்திறன் தரக் குறியீட்டை (PGI-D) 2025–26-ஐ கல்வி அமைச்சகம் வெளியிட்டது.
மாவட்டங்களுக்கான செயல்திறன் தரக் குறியீடு (PGI-D) என்பது 6 வகைகளாகவும் 11 களங்களாகவும் பிரிக்கப்பட்ட 70 குறிகாட்டிகளைப் பயன்படுத்தி மாவட்டங்களை மதிப்பிடும் ஒரு வருடாந்திர கட்டமைப்பாகும், இதன் மொத்த மதிப்பெண் 600 புள்ளிகள் ஆகும்.
இந்த மதிப்பீடானது ஒருங்கிணைந்த மாவட்ட கல்வித் தகவல் முறைமை பிளஸ் (UDISE+), பராக் ராஷ்டிரிய சர்வேக்ஷன் (PRS) 2024 மற்றும் பிரபந்த் (PRABANDH) தளம் ஆகியவற்றிலிருந்து தரவுகளைப் பயன்படுத்துகிறது.
2025-26 ஆம் ஆண்டில், 462 மாவட்டங்கள் தங்கள் முடிவு மதிப்பெண்களை மேம்படுத்தி உள்ளன, ஆனால் எந்த மாவட்டமும் மிக உயர்ந்த 'உத்கர்ஷ்' தரத்தை அடையவில்லை; 1 மாவட்டம் உத்தம்-1 தரத்தையும், 19 மாவட்டங்கள் உத்தம்-2 தரத்தையும் அடைந்து உள்ளன.
சிறப்பாக செயல்பட்ட 19 மாவட்டங்களில் டெல்லியில் இருந்து 4, பஞ்சாபிலிருந்து 7, கேரளாவிலிருந்து 3, மகாராஷ்டிராவிலிருந்து 2 மற்றும் சண்டிகர், டையூ மற்றும் ஹமிர்பூர் (இமாச்சலப் பிரதேசம்) ஆகியவை அடங்கும்.