TNPSC Thervupettagam

முதல் தமிழ் புயல் பெயர் - முரசு

November 4 , 2026 3 days 80 0
  • 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் புயல்களுக்குப் பெயரிடும் முறை தொடங்கியதிலிருந்து, தமிழ்ப் பெயரைப் பெற்ற முதல் வெப்பமண்டலப் புயல் 'முரசு' புயலாகும்.
  • 'முரசு' என்பது பண்டைய காலங்களில் தகவல்களைத் தெரிவிக்கவும், இயற்கை பேரழிவுகள் குறித்து மக்களை எச்சரிக்கவும் பயன்படுத்தப்பட்ட ஒரு பாரம்பரிய தமிழ் தாள வாத்தியத்தைக் குறிக்கிறது.
  • சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தால் (RMC) முன்மொழியப்பட்ட இந்தப் பெயர், உலக வானிலை அமைப்பின் (WMO) குழு தயாரித்த புயல் பெயர்களின் இரண்டாவது பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
  • முரசு உட்பட 13 பெயர்களை இந்தியாவும், மற்ற 12 நாடுகள் தலா 13 பெயர்களையும் பரிந்துரைத்துள்ளன.
  • திருக்கை, கலப்பை, ஏர் மற்றும் நாவாய் ஆகியவை பரிந்துரைக்கப்பட்ட பிற தமிழ்ப் பெயர்களாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்