TNPSC Thervupettagam

முதல் BIMSTEC பாரம்பரிய இசை விழா

August 7 , 2025 14 days 68 0
  • பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு அமைப்பின் (BIMSTEC) முதல் பாரம்பரிய இசை விழாவானது புது டெல்லியில் நடைபெற்றது.
  • இந்தியா, வங்காளதேசம், பூடான், மியான்மர், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த கலைஞர்கள் இந்த அமைப்பின் ஏழு உறுப்பினர் நாடுகளின் வளமான இசைப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர்.
  • 'SaptaSur: Seven Nations One Melody' என்று பெயரிடப்பட்ட இவ்விழாவினை இந்தியக் கலாச்சார உறவுகளுக்கான சபை (ICCR) ஏற்பாடு செய்தது.
  • தாய்லாந்தில் நடைபெற்ற BIMSTEC உச்சி மாநாட்டில் இசை மூலம் பிராந்திய கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவதற்கான பிரதமரின் உறுதிப்பாட்டைப் பின்பற்றி இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்