TNPSC Thervupettagam

முன்கூட்டிய அங்கீகாரத் திட்டம்

June 3 , 2025 7 days 39 0
  • ஏற்றுமதியாளர்களுக்கான முன்கூட்டிய அங்கீகாரத் திட்டத்தின் கீழ் சில விதிகளை தளர்த்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  • உரிமம் வழங்கப்படுவதற்கு முன்பு அவர்களின் பொருட்கள் அனுப்பப் பட்டிருந்தாலும், ஏற்றுமதியாளர்களுக்கு முன்கூட்டிய அங்கீகார (AA) திட்டத்தின் கீழ் சில வரியில்லா இறக்குமதிச் சலுகைகள் அனுமதிக்கப்படுகின்றன.
  • சமீப காலம் வரை, AA உரிமம் வழங்கப்பட்ட தேதிக்கு முன்னர் பொருள் வெளிநாட்டுத் துறைமுகத்தினை விட்டு ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தால், வரிவிலக்கின் பலன் எதுவும் கிடைக்கப் பெறாது.
  • மேலும் இந்தத் திட்டம் ஆனது ஏற்றுமதியாளர்கள் மூலப்பொருட்கள், கூறுகள் அல்லது ரசாயனங்கள் போன்ற உள்ளீடுகளை, அவை ஏற்றுமதிக்கான பொருட்களை மட்டுமே உற்பத்தி செய்யப் பயன்படுத்தப் படும் என்ற ஒரு நிபந்தனையின் பேரில் சுங்க வரி செலுத்தாமல் இறக்குமதி செய்யவும் அனுமதிக்கிறது.
  • இருப்பினும், DGFT நிறுவனம் சிறப்பு அனுமதி வழங்காவிட்டால், நியமிக்கப்பட்ட அரசு நிறுவனங்கள் மூலம் மட்டுமே இறக்குமதி செய்யக் கூடிய வகை என்று வரையறுக்கப் பட்ட பொருட்கள் அல்லது தயாரிப்புகளுக்கு இந்தத் தளர்வு பொருந்தாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்