TNPSC Thervupettagam

முப்படைகளின் தலைமைத் தளபதி

August 17 , 2019 2086 days 727 0
  • பிரதமரின் சுதந்திர தின உரையின் போது முப்படைகளின் தலைமைத் தளபதி (Chief of Defence Staff – CDS) என்ற பதவி உருவாக்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார்.
  • CDS ஆனது ஆயுதப் படைகளின் மூன்று பிரிவுகளுக்கும் “உயர் மட்டத்தில் திறனுள்ள தலைமைத்துவத்தை” அளிப்பதற்கும் அப்பிரிவுகளுக்கிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் உதவுவதற்கான ஒரு உத்தி என்று கூறப்படுகின்றது.
  • CDS என்பது முப்படைகளின் பணிகளை மேற்பார்வையிட்டு, ஒருங்கிணைக்கக் கூடிய ஒரு உயரிய இராணுவப் பதவியாகும்.
  • போர்க் காலங்களில் CDSன் பங்கு மிக முக்கியமானதாகும்.
  • CDS என்பவர் நீண்ட கால பாதுகாப்புத் திட்டமிடல் மற்றும் மேலாண்மை குறித்து நிர்வாகிக்கு (பிரதம அமைச்சருக்கு) ஒற்றை ஆலோசனை மற்றும் தடையற்ற முப்படைகள் குறித்த பார்வை ஆகியவற்றை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
  • இந்தியாவில் CDSஐ அமைப்பதற்கான முதலாவது பரிந்துரையானது 2000 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கார்கில் ஆய்வுக் குழுவிலிருந்து வந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்