மும்பை விமான நிலையம் பசுமை எரிசக்திப் பயன்பாட்டிற்கு மாற்றம்
October 24 , 2022 1014 days 465 0
மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையமானது, அதன் ஆற்றல் நுகர்வுத் தேவைகளுக்காக முற்றிலும் பசுமை எரிசக்தி வள ஆதாரங்களுக்கு மாறியுள்ளது.
இதன் மூலம் இந்தியாவின் 100 சதவீத நிலையான வளர்ச்சி கொண்ட விமான நிலையங்களில் ஒன்றாக இது மாறியுள்ளது.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பசுமை ஆற்றலில் மட்டுமே முழுவதுமாக இயங்கும் கலப்பினத் தொழில்நுட்பத்தை இந்தியாவில் அறிமுகப் படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இது அந்த விமான நிலையத்தினால், அதன் கார்பன் தடத்தைக் குறைத்து, 'நிகரச் சுழியம்' என்ற உமிழ்வை நோக்கி அதன் பயணத்தை மேலும் கொண்டுச் செல்லச் செய்வதற்கான அதன் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.