கோவிட்-19 நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை வழங்க உதவும் வகையில் இந்திய இரயில்வேயானது ‘மெட்போட்’ என்ற ஒரு தொலைதூரக் கட்டுப்பாட்டு மருத்துவத் தள்ளுவண்டியை உருவாக்கியுள்ளது.
இது இந்திய இரயில்வேயின் டீசல் ரெயில் என்ஜின் தொழிற்சாலையின் மத்திய மருத்துவமனையில் தனது சேவையை வழங்கி வருகிறது.
கொரோனா நெருக்கடியின் போது, மக்களுக்குப் போக்குவரத்து வசதிகள் மற்றும் உணவு தானியங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதை மட்டும் அல்லாமல், இந்திய இரயில்வேயானது கோவிட் - 19 நோயாளிகளுக்கும் வேண்டிய அளவில் பல்வேறு வசதிகளையும் வழங்கியுள்ளது.