மைத்ரி தடுப்பூசி முன்னெடுப்பு
February 5 , 2021
1627 days
669
- இந்த முன்னெடுப்பை இந்தியா அறிமுகப் படுத்தியது.
- இது அண்டை நாடுகளுக்கு கோவிட்-19 தடுப்பூசிகளைப் பரிசளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- சமீபத்தில், இந்த முயற்சியின் கீழ் இலங்கை மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் இந்தியாவில் இருந்து கோவிட் -19 தடுப்பூசிகளைப் பெற்றுள்ளன.
- இந்த முயற்சியின் கீழ் இந்தியா ஏற்கனவே 5 மில்லியனுக்கும் அதிகமான மருந்துகளை ஏழு அண்டை நாடுகளுக்கு வழங்கியுள்ளது.
- மாலத்தீவு, பூடான், நேபாளம், வங்கதேசம், மியான்மர், மொரீஷியஸ் மற்றும் செசல்ஸ் ஆகியவை அந்த 7 நாடுகளாகும்.
- கோவிஷீல்டின் வணிக ரீதியான வழங்கல் மொராக்கோ, பிரேசில் மற்றும் வங்க தேசம் ஆகிய நாடுகளுக்கு அளிக்கப் பட்டுள்ளன.

Post Views:
669