முன்னதாக இந்தியப் பொருளாதார மண்டலத்திற்கு ஒதுக்கப்பட்ட திட்டத்தை மாற்றி, மோங்லா துறைமுகப் பொருளாதார மண்டலத்தை மேம்படுத்துவதற்காக சீன அரசுக்குச் சொந்தமான நிறுவனத்துடன் வங்காள தேசம் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் வங்காள தேசப் பொருளாதார மண்டல ஆணையத்திற்கும் (BEZA), சீன சிவில் இன்ஜினியரிங் கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப்பரேஷனுக்கும் (CCECC) இடையே கையெழுத்தானது.
மோங்லா துறைமுகமானது, வங்கதேசத்தின் இரண்டாவது பெரிய மற்றும் இரண்டாவது பரபரப்பான கடல் துறைமுகமாகும் என்பதோடு இது கொல்கத்தாவில் இருந்து சுமார் 188 கி.மீ தொலைவிலும், சுந்தரவனப் பகுதிக்கு அருகிலும் அமைந்து உள்ளது.
உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மற்றும் இணைப்பு, தொழில்நுட்பம், தகவல் மற்றும் தொடர்புத் தொழில்நுட்பம் (ICT), பசுமை ஆற்றல், பேரிடர் மேலாண்மை மற்றும் பிராந்திய வர்த்தக இணைப்புகள் ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரிப்பது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
இந்தியா-வங்காள தேச எல்லைக்கு அருகில் அமைந்துள்ளதால் உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த தீஸ்தா நதி சீரமைப்புத் திட்டத்திற்கும் சீனா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.