மோல்னுபிரவிர் மருந்தானது லேசான (அ) மிதமான நோய் அறிகுறிகளைக் கொண்ட கோவிட்-19 நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளைப் பாதியளவாகக் குறைத்துள்ளது.
மெர்க் ரிட்ஜ்பேக் பையோதெராபெட்டிக்ஸ் (Merck and Ridgeback Biotherapeutics) என்ற மருந்து நிறுவனமானது இத்தகவலைக் கூறியுள்ளது.
இந்த மருந்திற்கு ‘EIDD 2801’ என இந்த நிறுவனம் பெயரிட்டுள்ளது.
இதில் ‘E’ என்பது அமெரிக்காவின் எமோரி பல்கலைக்கழகத்தில் இந்த மருந்து தயாரிக்கப் பட்டதைக் குறிக்கிறது.
இந்த வைரஸ் தடுப்பு மருந்துகள் வைரஸ் பிரதிபலிக்கும் செயல்முறையைத் தடுப்பதன் மூலம் செயல்படுகின்றன.