TNPSC Thervupettagam

யூரியாவிற்கான மானியத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

April 27 , 2021 1549 days 680 0
  • சமீபத்தில் TFL நிறுவனத்தில் தயாரிக்கவிருக்கும் யூரியாவிற்கு மானியம் வழங்க பொருளாதார விவகாரங்கள் மீதான மத்திய அமைச்சரவையானது ஒப்புதல் வழங்கி உள்ளது.
  • TFL என்றால் தால்செர் உரத் தொழிற்சாலை (Talcher Fertilizer Plant) என்பதாகும்.
  • TFL என்பது அரசின் கீழ் இயங்கும் ஒரு உரத் தொழிற்சாலையாகும்.
  • TFL நிறுவனம் ஒடிசாவில் ஒரு புதிய உரத்தொழிற்சாலையைத் தொடங்கவுள்ளது.
  • இத்தொழிற்சாலையானது நிலக்கரி வளிமமாக்கல் (Coal Gasification) முறையின் மூலம் யூரியாவினை உற்பத்தி செய்யும்.
  • இத்தொழிற்சாலையினை நிறுவ இந்திய அரசானது மானியம் வழங்குகிறது.
  • இந்தியாவில் நிலக்கரி வளிமமாக்கல் முறையின் மூலம் மண்ணிற்குத் தேவையான நைட்ரஜன் நிறைந்த ஊட்டச்சத்தினை தயாரிக்கும் ஒரே தொழிற்சாலை இதுவாகும்.
  • தால்செர் உரத் தொழிற்சாலையானது இந்திய உரங்கள் கூட்டுறவுக் கழகம், ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் மற்றும் பெர்டிலைசர்ஸ் நிறுவனம், GAIL மற்றும் Coal India நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் ஒரு கூட்டு நிறுவனமாகும்.
  • இத்தொழிற்சாலையை அமைப்பதற்கான ஒப்பந்தமானது  சீனாவில் அமைந்துள்ள வுகான் பொறியியல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்