ஒழுங்கமைக்கப்பட்ட தெருவோர உணவு வசதியை மேம்படுத்துவதற்காக 'பிரதான் மந்திரி ஸ்வநிதி தெருவோர உணவு மையத் திட்டத்தின்' கீழ் முதற்கட்டமாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட நகரங்களில் ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள லகன்பூரும் ஒன்றாகும்.
இந்த முன்னெடுப்பானது மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் (MoHUA) 'பிரதான் மந்திரி தெருவோர வியாபாரிகளின் ஆத்மநிர்பார் நிதி' (PM SVANidhi) திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.
நவீன விற்பனை உள்கட்டமைப்பு, சுகாதாரமான உணவு இடங்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கு சிறந்த வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குவதை இந்தத் தெருவோர உணவு மையம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
லகன்பூர் ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் அமைந்துள்ளதுடன் இது பஞ்சாபிலிருந்து ஒன்றியப் பிரதேசத்திற்குள் நுழையும் முக்கிய நுழைவாயிலாகச் செயல்படுகிறது.
பிணையமற்ற செயல்பாட்டு மூலதனக் கடன்களை வழங்குவதற்காகவும், தெருவோர வியாபாரிகளின் நிதி உள்ளடக்கத்தை ஆதரிப்பதற்காகவும் வேண்டி 2020 ஆம் ஆண்டில் பிரதமரின் ஸ்வநிதி திட்டம் தொடங்கப் பட்டது.