தேசிய CAMPA தனது 7வது ஆட்சிக்குழு கூட்டத்தில் நதி ஓங்கில்கள் (டால்பின்கள்), பனிச் சிறுத்தைகள், காட்டெருமைகள் மற்றும் இந்தியக் காண்டாமிருகங்கள் ஆகியவற்றுக்கான நான்கு புதிய பாதுகாப்புத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது.
தெற்காசிய நதி ஓங்கிலின் IUCN செந்நிறப் பட்டியலின் நிலையானது அருகி வரும் இனமாக உள்ளது; இந்த இனப் பாதுகாப்பிற்கான பாதுகாப்பு மற்றும் மீட்பு செயல் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பனிச்சிறுத்தையின் IUCN செந்நிறப் பட்டியலின் நிலையானது எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனமாக உள்ளது; இதன் எண்ணிக்கையை மதிப்பிடும் இரண்டாவது சுழற்சியுடன் பனிச் சிறுத்தை பாதுகாப்புத் திட்டத்தின் கட்டம்-II-க்கு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.
காட்டெருமையின் IUCN செந்நிறப் பட்டியலின் நிலையானது அருகி வரும் இனமாக உள்ளது;நீண்ட காலப் பாதுகாப்பிற்காக அகில இந்தியப் பாதுகாப்பு வியூகத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியக் காண்டாமிருகம் (ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம்) IUCN செந்நிறப் பட்டியலின் நிலையானது எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனமாக உள்ளது; இந்த இனத்தை மீட்பதற்கான பாதுகாப்பு செயல் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.